Editorial / 2020 மே 27 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில், டெங்கொழிப்பு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட், இன்று (27) தெரிவித்தார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல், டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை துப்பரவு செய்யதல் போன்ற வேலைத்திட்டங்கள் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், கூறினார்.
டெங்கு நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, டெங்கொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, அவர் பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.
அதேவேளை, டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்கும் பொருட்டு, வெற்றுக் காணிகளை வைத்திருப்போர், ஒரு வார காலத்துக்குள் தமது காணிகளைத் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026