Editorial / 2020 ஏப்ரல் 05 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை குறைப்பதற்கான தொற்று நீக்கி விசுரும் நடவடிக்கை, இன்று ஞாயிற்றுக்கிழமை (05) முன்னெடுக்கப்பட்டதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் சமட் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய பஸ்தரிப்பு நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களான சந்தை, பிரதேச செயலகம், வங்கிகள் போன்றவற்றில் தொற்று நீக்கி விசுரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அத்தோடு கொரோனா தொற்று தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதோடு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், தொடர்ச்சியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களால் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், சுகாதார வைத்தியதிகாரி ஏ.யூ.அப்துல் சமட் மேலும் தெரிவித்தார்.




1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago