Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, பைசல் இஸ்மாயில்
'உலகில் 366 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 21 இலட்சம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இலங்கையின் சனத்தொகையில் 10.3 சதவீதமாகக் காணப்படுகின்றது' என கிழக்கு மாகாகண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.
உலக நீரிழிவு தினத்தையொட்டி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் இன்று திங்கட்கிழமை (21) அக்ரைப்பற்றில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
தொற்றா நோயான நீரிழிவு நோயானது இளைஞர்கள் மத்தியிலும் அதிக தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. மரணத்துக்கான காரணிகளில் இப்போது நீரிழிவு நோய் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்நோயினால் உலகில் வருடம் ஒன்றுக்கு 15 இலட்சம் பேர் மரணிக்கின்றனர். இலங்கையில் சராசரியாக நாளொன்றுக்கு இந்நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை 100 ஆகக் காணப்படுகின்றது.
இலங்கையில் தொற்றா நோய் பாரிய சவாலாக மாறிவருகின்றது. இலங்கையின் நிலையான அபிவிருத்தியில் தொற்றா நோய் பெரும் தாக்கத்தினை செலுத்துவதுடன், அரசாங்கத்தின் சுகாதாரத்துறைக்கான செலவீனங்களும் அதிகரித்துச் செல்வதனை காணக்கூடியதாக உள்ளது.
பாதகமான உணவுப் பழக்க வழக்கங்கள், உடற் பயிற்சி இன்மை, புகையிலை, மதுப்பாவனைகள், மன அழுத்தம், சோம்பலான வாழ்க்கைப்பாங்கு என்பன இந்த நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காரணங்களாக அமைகின்றன.
இந்த ஆபத்தான நோயிலிருந்து நாம் விடுபட வேண்டும். அதற்கான விழிப்புணர்வுகள், முன்னேற்பாடுகள் பிரதேச மட்டங்களில் ஏற்படுத்தப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். நோய்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொண்டு ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்குவதற்கான வழிவகைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago