2026 மே 07, வியாழக்கிழமை

பிரதான வீதி வடிகானில் 9 அடி நீள முதலை (வீடியோ)

Mayu   / 2026 மே 07 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதான வீதியோரம் அமைந்துள்ள வடிகானில் சுமார் 9 அடி நீளமும், அதிக பருமனும் கொண்ட முதலை ஒன்று இருப்பதை இன்று (07) காலை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். நீர்நிலைகளில் இருந்து திசைமாறி வந்த இந்த முதலை, வடிகானுக்குள் சிக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.

இது குறித்து உடனடியாகச் சாய்ந்தமருது பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், முதலையை பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அகற்றி, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வடிகானுக்குள் ராட்சத முதலை சிக்கியிருக்கும் செய்தியை அறிந்த பெருமளவிலான பொதுமக்கள், அதனைப் பார்வையிடுவதற்காக அந்த இடத்தில் கூடினர். இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வனவிலங்கு அதிகாரிகள் வரும்வரை முதலையினால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாறுக் ஷிஹான்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .