Princiya Dixci / 2021 மார்ச் 18 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில், அறுகம்பை, சவாலை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை, பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எச்.எம். ஜமாஹிம், இன்று (18) தெரிவித்தார்.
சவாலை ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை தரமுயர்த்துமாறு ஆளுநர் அனுராதா யஹம்பதிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய, இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வருட வரவு - செலவுத்திட்ட நிதியிலிருந்நு ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை தரம் உயர்த்துவதற்கான மதீப்பீட்டு அறிக்கையை, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளதாகவும் கூறினார்.
அறுகம்பை சவாலைப் பிரதேசத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் இதுவரை எவ்வித அபிவிருத்தியும் செய்யாமல் காணப்படுகின்றது.
அறுகம்பை, சர்வோதயபுரம் ஆகிய பிரதேசத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அவசரத் தேவைகளுக்காக பல மைல்களுக்கு அப்பால் உள்ள பொத்துவில் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ் ஆரம்ப சுகாதார நிலையத்தை அபிவிருத்தி செய்து தரமுயர்த்தப்படும் பட்சத்தில், அறுகம்பைப் பிரதேசத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் நன்மையடைவார்களென, ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தி, சகல வசதிகளுடன் கூடிய நோயாளர் விடுதிகளையும் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஆளுநர் வாக்குறுதியளித்துள்ளதாகவும் பிரதேச சபையின் உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
20 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago