Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூலை 20 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைத்தொலைபேசி பாவனை என்பதும் தற்போது போதைப் பொருளை விட ஆபத்தாக அமைந்துள்ளது.இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள். எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும்.எனவே தேவைக்கு கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றினைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும் என கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதியா தெரிவித்தார்.
கல்முனை லீனத் பாலர் பாடசாலை சிறுவர் சிறுமியர்களின் பட்டமளிப்பு விழாவும் வருடாந்த நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
அன்றாட ஊடக செய்திகளில் கைத்தொலைபேசி குற்றங்கள் அதிகரிப்பு என்ற செய்தியே இடம்பிடித்துள்ளது.இதனால் பெற்றோர்கள் தம் பிள்ளைகளில் அக்கறை செலுத்துங்கள்.இன்று நாம் வாழும் உலகம் முழுவதும் கைததொலைபேசி பாவனைக்குள் உள்வாங்கப்பட்டு விட்டது. நாம் எதைச் செய்வதென்றாலும் எம் தேடல் கைத்தொலைபேசியில் தங்கி உள்ளது. இப் பழக்கம் தற்போது சிறுவர் முதல் முதியோர்வரையும் ஆட்கொண்டு விட்டது.
இதனால் அனைவரதும் சிந்திக்கும் ஆற்றல் வாசிப்புத்திறன் புதுமைகள் படைக்கும் திறன் என பல திறன்களை செய்யமுடியாமல் ரோபோக்கள் போல் இயங்குகின்றனர். இதனால் நேரம் வீண் விரையமாக்கப்படுகின்றது. ஆன்மீகம் இல்லாமல் போகின்றது. நல்லொழுக்கம் விழுமியம் குறைவடைகின்றது. கல்வி பாழாகிறது. பண்பாடுகள் மறைகின்றன.அன்னியப் பண்பாடுகள் நிலைபேறாகின்றன. எதிர்காலம் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதுடன் எதையும் சிந்திக்காத மனநோயாளர்களாக உலாவிக் திரியும் நிலைமை தோன்றும்.எனவே தேவைக்கு கைத்தொலைபேசிகளை பயன்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைத்து சமூகப்பொறுப்புள்ள நற்பிரஜையாக மாற வேண்டும் என்றார்.
பாறுக் ஷிஹான்
11 minute ago
18 minute ago
30 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
30 minute ago
33 minute ago