Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் மூலம் மக்கள் வழங்கிய ஆணையை மீறி, தான்தோன்றித்தனமாக செயற்படும் நிலைமை, பாராதூரமான செயற்பாடாகவே நோக்கப்படுவதுடன், அது ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமனாக உள்ளதென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்எம்.ஏ. கபூர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனையில் நேற்று (11) நடைபெற்ற சர்வமத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பிரதமரை நியமிப்பதற்கு பல ஜனநாயக வழிகள் இருக்கத்தக்க, அவை தொடர்பான எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் பிரதமா் நியமனம் தொடர்பில் அவசரமாக செயற்பட்டதைப் போன்றே காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி, நாடாளுமன்றத்தையும் கலைத்துள்ளார் எனத் தெரிவித்ததுடன், இதனால் ஜனாதிபதி, மக்கள் அபிமானத்தை இழந்து, அரசமைப்புச் சட்டத்தையும் அப்பட்டமாக மீறியுள்ளார் என்றார்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை, மீண்டும் பின்கதவால் கொண்டு வந்து ஆட்சி பீடம் ஏற்றுவததை, மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு, மோசமான பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், அடிக்கடி தேர்தல்களை நடத்துவதன் மூலம் அதிக செலவீனங்கள் ஏற்பட்டு, நாடும் மக்களும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் மீது சர்வதேசம் கொண்டிருந்த கசப்புணர்வை, நல்லாட்சி அரசாங்கம் இல்லாமல் செய்து, சிறந்த சர்வதேச தொடர்பை ஏற்படுத்தி, பல உதவிகள் நாட்டுக்குக் கிடைக்கும் நிலையில், ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடு, சர்வதேசத்தையும் சீற்றங்கொள்ளச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்படாமல் தாமதமடைந்து வருவதால் நாட்டின் அனைத்துச் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளனவென்றும் அவர் குறிப்பிட்டார்.
10 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
34 minute ago
1 hours ago