Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 நவம்பர் 12 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பள்ளைக்காட்டு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரத்தை மீறி சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 05 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி நேற்று வெள்ளிக்கிழமை (11) விதித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர் வியாழக்கிழமை (10) கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் நேற்று (11) ஆஜர்செய்தபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேவேளை,, ஒலுவில் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட 12 மௌன்டன் ரக சிகரட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 04 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Jul 2025
19 Jul 2025