Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மே 31 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அவர்களின் தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, இதன்மூலம் இம்மாவட்ட மக்கள் பாரிய நன்மைகளையும் பெற்று வருவதாக, கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் தெரிவித்தார்.
கொவிட்-19 நோய்த் தாக்கத்துக்கெதிராக அம்பாறை மாவட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில், சுகாதார, சுதேச மருத்துவத் துறை மூலம் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்ட சர்வமதக் குழுவின் ஏற்பாட்டில், இறக்காமம் பிரதேச மத்தியஸ்த சபையினர், சர்வ மதக் குழுவினர் போன்றோருக்கு இந்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பொதிகள், இறக்காமம் பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று (30) வழங்கப்பட்டன.
உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முஸப்பிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, கல்முனைப் பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல் இம்மருந்துப் பொதிகளை வழங்கி வைத்து, விசேட விழிப்புணர்வு செயற்பாடுகளையும் மேற்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago