Mayu / 2026 மே 07 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக அமைதி மற்றும் மக்களின் நல்வாழ்வை வேண்டி, பூலோக சித்தர்களின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு சித்தாண்டி, இலுக்குப்பொத்தானை வேலோடுமலையில் "சர்வ வல்லமை வாய்ந்த 210 சித்தர்கள் மகா யாகம்" ஏழாவது நாளாக இன்றும் பக்திப் பூர்வமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடக்கம்: கடந்த மே மாதம் 1-ஆம் திகதி (சித்ரா பௌர்ணமி) அன்று இந்த மகா யாகம் தொடங்கியது.
காலம்: இது 210 நாட்கள் தொடர்ச்சியாக, தினசரி காலையும் மாலையும் நடைபெறவுள்ளது.
தலைமை: ‘சித்தர்கள் குரல்’ அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் சிவசங்கர் ஜீ அவர்கள் இந்த வேள்விக்குத் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
நிறைவு: நூறு கோடி சிவ பஞ்சாட்சர ஜெபத்துடன் எதிர்வரும் 26.11.2026 (வியழக்கிழமை) வரை இந்த வேள்வி மிக விமரிசையாக நடைபெறும்.



இதுவரை உலகில் எங்குமே நடைபெறாத வகையில், காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மிக அபூர்வமான சஞ்சீவினி மூலிகைகளைக் கொண்டு இந்த அதி சக்தி வாய்ந்த வேள்வி வளர்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குறிப்பிட்ட சித்தருக்காகக் குருபூஜை செய்யப்பட்டு, அவருக்குரிய தனித்துவமான மந்திரங்கள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

நூறு கோடி சிவ பஞ்சாட்சர மந்திரங்கள் முழங்க நடைபெறும் இந்த அபூர்வ சஞ்சீவினி யாகத்தில் கலந்துகொண்டு சித்தர்களின் அருளைப் பெறுமாறு ஆன்மீகப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வி.ரி. சகாதேவராஜா
13 minute ago
20 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
26 minute ago