Mayu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவத் திருவிழா, புதன்கிழமை (01) மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

சிட்னி வாழ் தமிழ் மக்களால் பத்து நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வருடாந்தப் பிரம்மோற்சவத் திருவிழாவைத் தொடர்ந்து, இந்தத் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் ஆலயத்தில் அலங்காரத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை ஆலயச் சிவாச்சாரியார்களின் விசேட கிரியைகளைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான இலங்கை அடியார்கள் புடைசூழ ஆலயத் தாமரைத் தடாகத்தில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இதன்போது, புலம் பெயர் தமிழ் மக்கள் பக்திப் பரவசத்துடன் "ஆரோகரா" கோஷங்கள் முழங்க புனித நீராடி, முருகப் பெருமானின் அருளாசியைப் பெற்றனர். சிட்னி வாழ் தமிழ் சமூகத்தினரின் கலாசார மற்றும் ஆன்மீக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இந்த உற்சவம் அமைந்திருந்தது.


வி.ரி.சகாதேவராஜா
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago