Mayu / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தட்சிண கயிலாயம்' எனச் சிறப்பிக்கப்படும் திருகோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவத்தின் மகுட நிகழ்வான தீர்த்தோற்சவம், இன்று (01) புதன்கிழமை அதிகாலை சூரிய உதய வேளையில் திருகோணமலை சமுத்திரக் கரையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ, அம்பாள் புராதன சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சமுத்திரக் கரையை வந்தடைந்தார்.

சமுத்திரக் கரையில் அம்பாளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூசைகள் இடம்பெற்றன.

சூரிய உதயத்தின் போது வேத மந்திரங்கள் முழங்க, கடலில் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. இதன்போது திரளான பக்தர்கள் "ஆரோகரா" கோஷத்துடன் புனித நீராடி அம்பாளை வழிபட்டனர்.
அ . அச்சுதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .