Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு காஷ்மீரில் திரங்கா நதிக்காக தங்கள் உயரைத் தியாகம் செய்த தியாகிகளின் தியாகங்கள் புதிய ஜம்மு காஷ்மீரில் நினைவு கூரப்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாகவே இவ்விடயங்கள் ஆரம்பமாகியுள்ளன.
முன்னாள் ஆட்சியாளர்கள் அவர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காததால் கௌரவிக்கப்படாமல் இருந்த தியாகிகளின் பெயர்கள், 32 வருடங்களின் பின்னர் பொன் எழுத்துக்களால் எழுதப்படுகின்றன.
லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசாங்கம், 199 பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் வீதிகளுகளுக்கு சீருடை அணிந்த தியாகிகளின் பெயர்களை மறுபெயரிடுவதாக அறிவித்தது.
இந்தியா தனது 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய நிலையில் குறித்த திட்டம் அறிவிக்கப்பட்டதுடன், 199 திட்டங்களில், 132 திட்டங்களுக்கு ஜம்மு காஷ்மீர் பொலிஸ் தியாகிகளின் பெயரிடப்பட்டன.
பாகிஸ்தானின் அனுசரணையில் இடம்பெறும் போரில், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணியாமல், கடைசி மூச்சு வரை போராடி அவர்களின் மோசமான திட்டங்களை ஜம்மு காஷ்மீர் பொலிஸாரும் பாதுகாப்புப் படை வீரர்களும் முறியடித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் உயிர்த்தியாகம் செய்த பொலிஸார் மற்றும் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விடயம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பகுதிக்கு அவர் மேற்கொண்ட அனைத்துப் பயணங்களின்போதும், தியாகிகளான பொலிஸாரின் வீடுகளுக்கு செல்வதை உறுதிசெய்து, முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது என்று அவர்களது குடும்பத்தினருக்கு உறுதியளித்தார்.
ஷாவின் காஷ்மீர் பயணம் முடிவடைந்தவுடன், ஜம்மு காஷ்மீர் அரசாங்கம் 2021 ஒக்டோபரில், யூனியன் பிரதேசத்தில் உள்ள பொது உட்கட்டமைப்புக்கு முக்கிய தியாகிகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களின் பெயர் மாற்றப்படும் என்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago