2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

3ஆவது கணவனுடன் மனைவி ஓட்டம் 2 கணவன்மாரும் புகார்

Editorial   / 2022 ஜூன் 09 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலருடன் தலைமறைவான தங்களது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு, பெண்ணின் இரண்டு கணவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர், பரோசா பொலிஸ் நிலையத்திலேயே இந்த விசித்திரமான முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கணவரின் வீட்டை விட்டு, மூன்றாவது காதலருடன் வெளியேறிய பெண், இப்போது எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை என்று இரண்டு கணவர்மாரும் முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

முதல் கணவரை காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவருடன் வாழ்ந்துவந்த நிலையில், இப்போது மூன்றாவது நபருடன் சென்றுவிட்டதாகவும் சமூக வலைத்தளம் ஊடாகவே இந்த நண்பர் அறிமுகமானதாகவும் தற்போது அவருடன் வசிப்பதாகவும், அந்தப் பெண்ணின் இரண்டு கணவர்மாரும் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .