A.K.M. Ramzy / 2021 ஜூன் 20 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாட்னா
பீஹாரில் தடுப்பூசி ஏற்றச் சென்ற பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட தாதிகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னாவின் புன்புன் பிளாக்கில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 16ஆம் திகதி, அங்குள்ள பள்ளி ஒன்றில் தடுப்பூசி போட சென்றார். அங்கு பதிவு உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகள் முடிந்த பின்னர் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, அவரது உடல்நிலையை கண்காணிக்க அருகில் உள்ள அறையில் அமர்ந்திருக்கும்படி பெண்ணுக்கு தாதிகள் அறிவுறுத்தினர்.
அவர், அங்கு அமர்ந்திருந்த போது வந்த மற்றொரு தாதியார் ஒருவர், ஏற்கனவே தடுப்பூசி போட்ட இடத்திலேயே கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தினார்.
அப்போது பெண்ணுக்கு, ஏற்கனவே தடுப்பூசி செலுத்திவிட்டதாக தெரிவித்த போது, அதற்கு அந்த செவிலியர், அதே கைகளில் தான் மீண்டும் தடுப்பூசி போடப்படும் என கூறிவிட்டு சென்றதாக தெரிவித்தார்.
10 minute ago
24 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
33 minute ago
1 hours ago