Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 19 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு அவற்றைப் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் எனவும் ஒபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் மார்ச் 12ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இடைக்கால மனுக்கள் மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
இந்த மனுக்களில் நேற்று முன்தினம் தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுக-வின் பெயர் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ பன்னீர் செல்வத்திற்கு நிரந்தர தடைவிதித்து உத்தரவிட்டார். S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
5 hours ago