Editorial / 2023 ஜூலை 11 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியருக்கு படித்துக்கொண்டிருந்த மாணவன், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தனது ஆண் உறுப்பை அறுத்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஐதராபாத்தில் இடம்பெற்றுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியான பாப்பிரெட்டி நகரை சேர்ந்தவர் தீட்சித் ரெட்டி (வயது 21). இவர் செகந்திராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு வைத்தியருக்கு படித்து வந்தார்.
தீட்சித் ரெட்டிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தார். அது கைகூடவில்லை.
அவருக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வந்தனர். தீட்சித் ரெட்டியின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை (09) வெளியூருக்கு சென்று இருந்தனர்.
தீட்சித் ரெட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அந்த நேரத்தில் தீட்சித்ரெட்டி தனது ஆண் உறுப்பை அறுத்துக் கொண்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
வெளியூர் சென்றிருந்த அவரது பெற்றோர் திங்கட்கிழமை காலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னலை திறந்து பார்த்தபோது தீட்சித் ரெட்டி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026