2025 மே 12, திங்கட்கிழமை

ஆயுத உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்களின் விடுமுறை இரத்து

Freelancer   / 2025 மே 04 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் விடுப்பு உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் ஆயுதங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேவில் இந்திய போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டுகள், வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகளும் அந்த நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 7 ஆயிரம் பேருக்கு விடுமுறை நீட்டிப்பு கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று இந்தியா முழுவதும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X