2025 ஜூலை 16, புதன்கிழமை

இணைய தடை நீட்டிப்பு

Mithuna   / 2023 நவம்பர் 29 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே த மே மோதம் 3-ந்திகதி கலவரம் வெடித்தது 7 மாதங்களுக்கு மேலாகியும் அங்கு இன்னும் வன்முறை ஓய்ந்தபாடில்லை.

இதனிடையே கலவரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வதந்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் பரப்பப்படுவதை தடுக்க மாநிலம் முழுவதும் மே 3-ந்திகதி முதல் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மணிப்பூரில் இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை (28) இரவு முடிவுக்கு வந்த நிலையில் தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகின்ற டிசெம்பர் 5-ந்திகதி இரவு 7.45 மணி வரை இணைய சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X