Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றம் செய்தால் இந்தியா என்ற பெயரை தங்களுக்கு வழங்குமாறு ஐநாவில் பாகிஸ்தான் கேட்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10 ஆம் திகதி வரையில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகின்றனர்.
ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவ திரவுபதி முர்மு இரவு விருந்து வைக்கவுள்ளார். இதையொட்டி வெளியிடப்பட்ட அழைப்பிதழில் திரவுபதி முர்மு பாரத் குடியரசு தலைவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் இந்தியாவின் பெயர் மாற்றம் செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகின..
தற்போது இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பாரத் என்று பெயர் மாற்றும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையே சவுத் ஆசியா இன்டெக்ஸ் என்ற அமைப்பு பாகிஸ்தான் குறித்து தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது இந்தியா என்ற பெயரை பாரத் என்று இந்திய அரசு மாற்றினால், இந்தியா என்ற பெயரை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் அரசு ஐநாவில் கோரிக்கை வைக்கக் கூடும் என்று, சவுத் ஆசியா இண்டெக்ஸ் தெரிவித்திருந்தது. இந்த தகவலை பாகிஸ்தான் உள்ளூர் ஊடகம் கூறியிருந்ததாக சவுத் ஆசியா இண்டெக்ஸ் குறிப்பிட்டிருந்தது
26 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago