2025 ஜூலை 16, புதன்கிழமை

இந்தியா தோல்வியால் அதிர்ச்சியில் மரணம்

Freelancer   / 2023 நவம்பர் 20 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருப்பதி  அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார். என்பவர்  தன்னுடைய வீட்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்துள்ளார். போட்டியின் போக்கு மாற மாற வேதனையில் காணப்பட்ட ஜோதிகுமாருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குடும்பத்தினர் உடனடியாக அவரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஜோதிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தாங்கி கொள்ள இயலாமல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X