Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூலை 12 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமை ஒழிப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்றும், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச வறுமைக் குறியீட்டு அறிக்கையின் அண்மைக் குறிப்பில் இது இடம்பெற்றுள்ளது. யுஎன்டிபி எனப்படும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
இந்தியாவில் வறுமை நிலவரம் தொடர்பாக 2005/2006 முதல் 2019/2021 வரையிலான 15 ஆண்டு காலத்தில் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா உள்பட 25 நாடுகள் கடந்த 15 ஆண்டுகளில் வறுமை ஒழிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்போடியா, சீனா, காங்கோ, ஹொண்டூராஸ், இந்தோனேசியா, மொராக்கோ, செர்பியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்தப் பட்டியலில் அடங்கும்.
ஐ.நா. புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா விஞ்சியது. இந்திய மக்கள் தொகை தற்போது 142.86 கோடி என்றளவில் உள்ளதாக ஐ.நா.வின் அண்மை அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2005-ல் 44.3% ஆக இருந்த நிலையில் 2019/2021-ல் 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago