2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

இறுதிச் சடங்கில் சிலிர்த்த சிசு

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அசாம் மாநிலத்தை சேர்ந்தபெண்ணொருவருக்கு பிரசவவலி ஏற்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள், தாய், சேயில் ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதன்படி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. தாய் நலமாக இருப்பதாகவும், சிசு இறந்தே, பிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் மறுநாள் அந்த ஆண் சிசுவை இறப்பு சான்றிதழுடன் குடும்பத்தினரிடம் வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைத்தது.

அதனை தொடர்ந்து, இறுதி சடங்குக்காக குடும்பத்தினர் சிசுவை மயானத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது சிசு சிலிர்த்துள்ளது. அத்துடன் அழுதுள்ளது. இதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக சிசுவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த சிசு நலமாக உள்ளது. இதனிடையே சிசு இறந்துவிட்டதாக கூறிய தனியார் வைத்தியசாலை முன்பு திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .