Freelancer / 2023 ஜூலை 05 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரு மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடு மேய்ப்பவர் தனது ஆட்டுக்குட்டிக்கு விலையாக ஒரு கோடி ரூபாய் தந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவர் மறுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தாராநகர் மற்றும் சுற்றப்பட்டு கிராமங்களில் தற்போது இந்த ஆட்டுக்குட்டியை பற்றிய தான் பேசி வருகின்றனர். ஒரு சில அறிக்கைகளின் படி, முஸ்லிம் சமூகத்தில் மிகவும் உகந்ததாக கருதப்படும் ஒரு சில எண்கள் இந்த ஆட்டுக்குட்டியின் வயிற்றில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ராஜஸ்தானை சேர்ந்த ஆடு மேய்ப்பவரான ராஜூ சிங்குக்கு ஆட்டுக்குட்டியின் உடலில் இருக்கக்கூடிய அந்த எழுத்துக்களுக்கான அர்த்தம் ஆரம்பத்தில் புரியவில்லை. எனினும் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த ஒரு சிலரிடம் இது குறித்து கேட்டு தெரிந்த பிறகு, ஆட்டுக்குட்டியின் வயிற்றில் காணப்படும் '786' என்ற எண்ணானது முஸ்லிம் சமூகத்தில் மிகவும் உகந்த ஒன்றாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது அவருக்கு தெரியவந்தது.
16 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
49 minute ago