Freelancer / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுமியைக் கடத்தி ஓடும் காரிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் 16 வயதான சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கப்தங்கஞ்ச் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் பொலிஸார் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளதோடு மூத்த அதிகாரிகளைச் சந்தித்த பின் தான் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பொலிஸார் மூவரைக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட சிறுமி, “நான் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றபொழுது, ஒருவர் என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அருகிலிருந்த குடிசைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். பின்னர், அவருடன் இருக்கும் இரு நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்து என்னைக் காரில் கடத்தினர். ஓடும் காரில் வைத்தே பாலியல் ரீதியாக மூவரும் துன்புறுத்தினர். தொடர்ந்து, மயக்க நிலையில் நான் வீட்டின் வெளியே வீசப்பட்டேன். என்று சிறுமி தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago