Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 15 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா (81 வயது).
மூன்று முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில், 'கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி வழக்கொன்றில் உதவிக்கேட்டு எடியூரப்பாவை சந்தித்தேன். அப்போது என் மகளை தனியாக அழைத்துச் சென்ற எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பின் என் மகளிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். தொடர்ந்து, உனக்கு மேற்கொண்டு தேவையான உதவிகளை நான் செய்கிறேன். இங்கு நடந்த விஷயத்தினை வெளியே சொன்னால் நீதான் பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்று எனது மகளை அவர் மிரட்டியும் உள்ளார். என் மகள் ஏற்கெனவே ஒரு பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்டவர். தாத்தா என்றே என் மகள் எடியூரப்பாவை அழைத்தார். நான் என் அப்பாவை போல அவரை பார்த்தேன்" என கூறப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
சிறுமி குடும்பத்தினர் மீது, ஏற்கெனவே மோசடி (வர்த்தகம் தொடர்பான) வழக்கொன்று பொலிஸில் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் சிறுமியின் தாய் பல கோடி மோசடி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தங்கள் மீது தவறில்லை என்பதால், நடவடிக்கையை துரிதப்படுத்த சிறுமியும் அவரின் தாயும் எடியூரப்பாவை அணுகியதாகவும் அப்போதுதான் எடியூரப்பா சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த புகாரின்கீழ், போக்ஸோவில் எடியூரப்பா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பெங்ளுர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், மேற்கொண்டு விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும் என சிறுமியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago