Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Freelancer / 2024 மே 30 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதனால் மீனவ கிராமமான வம்பாகீரப்பாளையத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அசோக், பரணி, ஸ்ரீகாந்த் ஆகிய நான்கு பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள் அவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரயில் நிலையம் செல்ல கூடிய சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுக்கப்படும்; வழக்கில் இருந்து விடுபடாத அளவிற்கு தண்டனை கொடுக்கப்படும் என உறுதி அளித்து பொலிஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago