Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரபிரதேசம் காசியாபாத் திலா மோர் ஸ்டேஷன் பகுதியில் பொலிஸார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது பெண்ணொருவர், பெரிய டிராலி சூட்கேசை ஒன்றை இழுக்க முடியாமல் இழுத்து வந்து உள்ளார்.
அப்பெண்ணை பொலிஸார் நிறுத்தி விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால், முன்னுக்கு பின் முரணான தகவல்களை கொடுத்த அப்பெண், ஒரு கட்டத்தில் தப்பியோட முயன்றுள்ளார்.
சந்தேகம் அடைந்த பொலிஸார் அந்த பெண்ணை பிடித்து அந்த சூட்கேசை திறக்குமாறு கூறினார். அதில், இளைஞனின் உடல் இருந்துள்ளது.
அதன்பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில்,
3 வருடங்களாக கணவனை பிரிந்து வாழும் அப்பெண், திருமணம் செய்து கொள்ளாமல், மற்றொரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவ்வப்போது அப்பெண் வற்புறுத்தி வந்துள்ளார். அதனை அந்த ஆண் நிராகரித்து வந்துள்ளார்.
அப்பெண்ணின் மீது கோபமடைந்த அந்த ஆண்: "நீ ஒரு தந்திரமான பெண், நீ உன் கணவருக்கு விசுவாசமாக இருக்கவில்லை, நீ எனக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும்" என்று கூறி உள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த பெண், ஆணின் கழுத்தை அறுத்து படுகொலைச் செய்து உடலை பெரிய டிராலி சூட்கேசில் மறைத்து வைத்து மறைவான இடத்திற்கு கொண்டு சென்று போட நினைத்து உள்ளார். ஆனால் பொலிஸாரிடம் வசமாக சிக்கி கொண்டார்.
6 minute ago
10 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
10 minute ago