2025 மே 08, வியாழக்கிழமை

காதலியை ‛‛ஸ்பானரால்’’ அடித்தே கொன்ற காதலன்

Editorial   / 2024 ஜூன் 20 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
பலர் முன்னிலையில் காதலியை ஸ்பானரால் அடித்தே கொன்ற கொடூர வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மும்பையின் கிழக்கே வசைவிரார் என்ற பகுதி முக்கிய சாலையில்   பட்டபகலில், 20 வயது இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த இளைஞன் தன் கையில் வைத்திருந்த ஒன்றரை அடி நீள ‛‛இரும்பு ஸ்பானரால்'' பெண்ணின் பின் தலையில் ஓங்கி அடித்தான். அவள் நிலைகுலைந்து கீழே விழுந்தும் திரும்ப திரும்ப அடித்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

இதனை பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர செயலை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. இதன் வீடியோ இணைய தளத்தில் வைரலானது.

பொலிஸார்  நடத்திய விசாரணையில், கொலையான பெண் பெயர் ஆர்த்தி, 20 என்பதும், இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த இளைஞர் முன்னாள் காதலன் ரோஹித்யாதவ் என்பதும் தெரியவந்தது. தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறு ஒருவருடன் ஆர்த்தி தொடர்பு வைத்த ஆத்திரத்தால் இக்கொடூர கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. ரோஹித் யாதவை கைது செய்து பொலிஸார் விசாரிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X