Mayu / 2024 மார்ச் 20 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
காந்தி போல் வேடம் அணிந்து கட்டுப்பண தொகையான 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபரால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் அடுத்த செல்லப்பம்பட்டியை சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ் இவர் காந்தி போல் வேடம் அணிந்து தொடர்ந்து சமூக நல பணிகள் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் (மார்ச் 20) முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி காந்தி போல் வேடம் அணிந்து வந்த ரமேஷ் கட்டுப்பண தொகையான ரூ. 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக மாற்றி தோளில் சுமந்தபடி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச. உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago