Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 29 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியில் காற்று தர மேலாண்மை ஆணைக்குழு (CAQM) வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, காலாவதியான வாகனங்கள் எந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜூலை 1ஆம்திகதி முதல் டெல்லியில் எரிபொருள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக டெல்லியில் காலாவதியான வாகனங்களை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் காற்று தர மேலாண்மை கமிஷன் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவு வருகிற 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.
அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த வாகனங்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது பெட்ரோல் 'பங்க்'களில் நுழைந்தாலோ உடனடியாக பறிமுதல் செய்யப்படும். இதற்காக 500-க்கு மேற்பட்ட 'பங்க்'களில் சிறப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
2 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
30 Aug 2025