Freelancer / 2024 மார்ச் 17 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹரியானா மாநிலம் ரேவாரியில் நேற்று முன்தினம் (16) மாலை கொதிகலன் வெடித்து சிதறியதில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டம் தருஹேரா பகுதியில் இயங்கிவரும் ~லைஃப் லோண்ட்| என்ற தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாலை கொதிகலன் ஒன்று வெடித்துள்ளது. இதில் சுமார் 40 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து, காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். S
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026