Editorial / 2021 மே 09 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்துவந்தால் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமென பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) எம் எல் ஏ ஒருவர், கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில் உள்ள பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்.எல்.ஏ.,வான சுரேந்திர சிங், இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், ஒரு தண்ணீர் குவளையை வைத்துக்கொண்டு, அதில் பசுவின் கோமியத்தை கலந்து, குடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது: பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடுத்த அரை மணிநேரத்துக்கு ஏதும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு குடித்துவந்தால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்.
என்னுடைய ஆரோக்கியமான உடல்நிலைக்கும் இதுதான் காரணம், மக்களுக்காக 18 மணிநேரம் என்னால் உழைக்க முடிகிறது. எவ்விதமான நோய்க்கும் பசுவின் கோமியம் மருந்தாகும், குறிப்பாக இதய நோய்களுக்கு கோமியம் சிறப்பாக வேலை செய்யும்” என்றார்.
இந் நிலையில் குறித்த வீடியோவானது இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2 minute ago
10 minute ago
25 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
25 minute ago
39 minute ago