2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கோவிலுக்கு ரூ.9.54 லட்சம் நன்கொடை வழங்கிய யாசகர்

Mithuna   / 2024 பெப்ரவரி 04 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திரா மாநிலம், முத்தியாலம் பாடு மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்தவர் யாதி ரெட்டி. இவர் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் முன்பாக யாசகம் பெற்று  வருகிறார்.

​இந்நிலையில் யாசகமாக பெற்று சேமித்த ரூ.1 லட்சத்தை சாய்பாபா கோவில் வளர்ச்சிக்கு நிதியாக கோவில் நிர்வாக தலைவரிடம் வழங்கியுள்ளார்.

இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் கவுதம் ரெட்டி கூறுகையில், “யாதி ரெட்டி கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல தவணைகளில் ரூ.8.54 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார். தற்போது வழங்கியுள்ள ரூ.1 லட்சத்துடன் ரூ.9.54 லட்சம் வழங்கி உள்ளார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .