2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சமாதியில் உறுதிமொழி எடுத்த வீரப்பனின் மகள்

Editorial   / 2024 மார்ச் 26 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனின் சமாதியில் வீரப்பனின் மகள் வித்யா ராணி வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில்  ஞாயிற்றுக்கிழமை (24) அறிமுகம் செய்துவைத்தார். அதில், கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வீரப்பனின் மகள் வித்யா ராணி  வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்பாக மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனின் சமாதியில் அவரது வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி  எடுத்துக்கொண்டார்.

வீரப்பனின் மூத்த மகள் வித்யா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக)  இணைந்தார். அப்போது, அவருக்கு ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X