A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக சைக்களில் நடிகர் விஜய் வந்தார். சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
திரையுலகப் பிரபலங்களில் ரஜினி, கமல், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் காலை 7 மணிக்கு எல்லாம் தங்களுடைய வாக்கினைப் பதிவு செய்துவிட்டார்கள். இதில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக காலை 6:30 மணிக்கு எல்லாம் அஜித் வாக்குச்சாவடி வந்து காத்திருந்து முதல் நபராக தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
காலை 9 மணியளவில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் விஜய் வாக்களிப்பார் என்று தகவல் வெளியானது. பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் பலரும் வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டார் விஜய்.
இதைச் சற்று எதிர்பாராத ரசிகர்கள், அவருடைய சைக்கிள் பயணத்தை பின் தொடர்ந்தார்கள். சில பொலிஸாரும் விஜயின் பாதுகாப்புக்கு உடன் வந்தார்கள். ஒரு கட்டத்தில் சைக்கிள் பயணத்தை பின் தொடர்பவர்களின் கூட்டம் அதிகரிக்கவே, வேகமாக சைக்கிளை ஓட்டினார் விஜய்.
பின்பு நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் விஜய். அவர் சைக்கிளில் வந்ததால் அங்கு ரசிகர் கூட்டம் அதிகமாகக் கூடியது.
1 minute ago
9 minute ago
24 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 minute ago
9 minute ago
24 minute ago
38 minute ago