Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 01 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருநாள் அந்தப் பெண், தனிமையில் இருப்பதற்காக தொழிலதிபரை அழைத்துள்ளார். நம்பி சென்ற தொழிலதிபர் தப்பித்தோம் பிழைத்தோமென வீட்டுக்குத் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்த பெண் கணவர் துபாயில் இருப்பதாகவும், தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதை நம்பிய தொழிலதிபர், பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம்பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 5 பேரடங்கிய கும்பல், தொழில் அதிபரை தாக்கி ஆபாச வீடியோ, மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளனர்.
தங்களுக்கு பணம் தராவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டிய அந்த கும்பல், கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க செயின் , செல்போன் , ஏடிஎம் கார்டு ,கார், பத்தாயிரம் பணம் மற்றும் காரில் இருந்த ஒரு சில ஆவணங்களையும் பறித்துக் கொண்டு விரட்டி உள்ளது.
வீட்டிற்குச் சென்றால்தான் பணம் கொடுக்க முடியுமென தொழிலதிபர் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை காரில் ஏற்றி அந்த கும்பல் கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். வழியில் தொழிலதிபர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.
அதன்பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணைகளின் போது அந்தப் பெண் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டனர். தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பழகுவோரை, அழைத்து பணம் பறிக்கும் செயற்பாடுகளை அக்கும்பல் மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025