Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாட்டுக்கு நடுரோட்டில் பொம்மை யானை நடனம் ஆடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டிரெண்டிங் பாடல்களுக்கு ரசிகர்கள் நடனம் ஆடி இணையத்தில் பதிவிடுவது வழக்கம். அப்படியான பாடல்களுக்கு குழந்தைகளும் விலங்குகளும் நடனம் ஆடும்படியான வீடியோ பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அப்படியான ஒரு வீடியோதான் இணையத்தில் இப்போது வைரலாகி இருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ‘ஜெயிலர்’. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியிலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளார்.
’ஜெயிலர்’ படத்தில் அனிருத் இசையில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆனது. இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது கூட, பின்னணி இசை இல்லாமல் தான் படத்தைப் பார்த்தபோது சுமாராக இருந்ததாகவும் ஆனால், அனிருத் இசையோடு படம் பார்த்தபோது வேற லெவலில் இருந்ததாகவும் பாராட்டி இருந்தார். குறிப்பாக, இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடல் இணையத்தில் வைரலானது.
ஏஐ வெர்ஷன், குழந்தைகள் நடனம் என இந்தப் பாடல் கடந்த வருடத்தில் அதிகம் விரும்பப்பட்ட பாடலாக இருந்தது. யூடியூபிலும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இப்போது பொம்மை யானை ஒன்றில் உள்ளே ஆட்கள் இருக்கும்படி செட் செய்து ‘காவாலா’ பாட்டுக்கு நடனம் ஆட விட்டிருக்கிறார்கள். பார்த்தவுடன் ஒரு நிமிடம் நிஜ யானைதான் நடனம் ஆடுகிறதோ என பலரும் இந்த யானை டான்ஸூக்கு லைக்ஸ் தெறிக்க விட்டு வருகிறார்கள்.
Yov @anirudhofficial Enaya Pani Vachirukka?
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
09 May 2025