2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

தமிழருக்கு எதிரான கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் பகிரங்க மன்னிப்பு

Freelancer   / 2024 மார்ச் 20 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர் குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரினார் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே.

பெங்களூர், இராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழர்களே காரணம் என அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையான நிலையில், இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய பேச்சு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஷோபா,

“கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூர் உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் பாதிக்கப்பட்டிருந்;தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X