Freelancer / 2023 நவம்பர் 16 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்திகதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுவதற்காக புறப்பட்டபோது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி "நாங்கள் ஒற்றுமைய உள்ளோம். ஒற்றுமையாக இருப்போம். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெறும்" என தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல் காந்தி ஹனுமான்கார்ஹ், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago