Janu / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓடிப்போய் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் தாயை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற இளம்பெண்ணின் குடும்பத்தினரை பொலிஸார் கைது செய்தனர்.
பஞ்சாப்பை சேர்ந்த ஒரு இளைஞர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அதனால் ஆவேசமடைந்த பெண்ணின் குடும்பத்தினரின் சிலர், இளைஞரின் வீட்டிற்கு வந்தனர். அப்போது அந்த வீட்டில் இளைஞரின் 55 வயதுடைய தாய் மட்டுமே இருந்தார். கும்பலாக வந்த அவர்கள், திடீரென அந்தப் பெண்ணை தாக்கி அவரது ஆடைகளை களைத்து ,அரை நிர்வாணமாக தெருக்களில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். இதனை அப்பகுதியினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எவரும் தடுக்கவில்லை.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான பின்னரே பொலிஸார் நடவடிக்கை எடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான நபர்களையும் தேடிவருகின்றனர்.

8 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Apr 2026