Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 மார்ச் 07 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை மதுரவாயல் பகுதியில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த மகளை தாய் கண்டித்ததால், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அருகே இந்திராகாந்தி தெரு பகுதியைச் சேர்ந்தவரான 17 வயதான ஸ்ருதிலயா என்னும் 12ஆம் வகுப்பு மாணவியே தற்கொலை செய்துகொண்டவர்.
செவ்வாய்க்கிழமை (05), வழக்கம்போல இவரது தாய் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தனது தம்பியுடன் வீட்டில் இருந்துள்ளார்.
இரவு தாய் வேலை முடித்து வீட்டிற்கு வந்தபோது மாணவியின் அறை நீண்ட நேரமாக சாத்தியிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த தாய், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய் பார்த்தபோது, மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து தெரியவருவதாவது, 12ஆம் வகுப்பு பொதுப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மாணவி படிக்காமல், செல்போன் பார்த்துக்கொண்டிருந்ததை தாய் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்தே மாணவி, தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago