Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 பெப்ரவரி 02 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ( தி.மு.க) தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து தி.மு.க. தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளது.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை, கோவை நிர்வாகிகளுடன் நாளை, நாளை மறுநாள் ஆலோசனை நடத்திய பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago