Editorial / 2025 ஜூலை 21 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் (அ.தி.மு.க) முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் (திமுக) வில் இணைந்தார்.
எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய நாள் முதலே கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தவர் அன்வர் ராஜா. ராமநாதபுரத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக அறியப்படுகிறார். மிகச் சிறந்த சொற்பொழிவாளரும் கூட.
1986 உள்ளாட்சித் தேர்தலில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்த அவர் படிப்படியாக உயர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார். கடந்த 2001 முதல் 2006 வரை ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் முகம்மது ஜலீலை தோற்கடித்து 16-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா பக்கம் நின்றதால் கடந்த 2021 டிசம்பர் 1-ம் தேதி இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு கடந்த, 2023ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து சிஏஏ, வக்ஃப் திருத்தம் உள்ளிட்ட சட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்தார். அதிமுகவின் சிறுபான்மை சமூகத்தின் முகமாக அறியப்பட்டவர். அதிமுக, பாரதிய ஜனதா கட்சி ( பாஜக) உடன் கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
13 minute ago
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
45 minute ago
53 minute ago