Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லியில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்கள் ஏராளமானோர் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த திட்டத்தை திருநங்கைகளுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் இதுதொடர்பான அறிவிப்பை புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “நமது சமூக சூழலில் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களும் மனிதர்கள்தான், சமமான உரிமைகளைப் பெற்றுள்ளவர்கள்.
எனவே, அரசு பேருந்துகளில் அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், இதற்கான ஒப்புதலை அமைச்சரவை விரைவில் அளிக்கும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்த முடிவு, திருநங்கைகளுக்கு மிகப்பெரும் பலன் அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
20 minute ago
33 minute ago
35 minute ago