Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கொல்கத்தாவின் பால்பட்டி மச்சுவா அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில், செவ்வாய்க்கிழமை (29) இரவு 8.15 மணயளவில் தீ ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் வேகமாக வெளியேற தொடங்கினர். கட்டிடத்தின் 4ஆவது மாடியில் சிக்கியவர்கள் ஏணியின் மூலம் வெளியேற முயற்சி செய்தனர். இதனால் சிலர் காயமடைந்தனர்.
இந்த தீயானது பரவத்தொடங்கியதால் ஹோட்டலில் பலரும் சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சில மணி நேர போராட்டங்களுக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து ஹோட்டலுக்குள் சென்று அதிகாரிகளுக்கு சோதனை செய்தனர்.
அப்போது தீயில் கருகிய நிலையில் 14 பேரின் உடலை அதிகாரிகள் மீட்டனர். உயிரிழந்த 14 பேரில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
6 hours ago
30 Apr 2025