Freelancer / 2023 ஒக்டோபர் 02 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 2-ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாடு முழுவதும் ‘தூய்மை இந்தியா திட்டதின்’ கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு மணி நேரம் தூய்மை இயக்கத்தில் பங்கேற்று குப்பைகளை திங்கட்கிழமை (02) அகற்றினர்.
இந் நிலையில், பிரதமர் மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன்புரியாவுடன் இணைந்து குப்பைகளை அகற்றினர்.
இது தொடர்பான வீடியோவையும் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏனைய சில இடங்களில் குப்பைகளே இல்லாத வீதிகளில் சில அதிகாரிகள் துடைப்பை கட்டையால் கூட்டிக்கொண்டிருப்பதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .