2025 மே 09, வெள்ளிக்கிழமை

தொழுகையில் போது மாணவர்கள் மீது தாக்குதல் : காணொளி

Mayu   / 2024 மார்ச் 17 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் அகமதாபாத்திலுள்ள அரசு பல்கலைக்கழகத்தில் இந்தியா மட்டுமின்றி ஆப்ரிக்கா, மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த மாணவர்களும் அதிகளவில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்கள் சனிக்கிழமை (16) ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலரால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு விடுதியை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும், கிரிக்கெட் மட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X