Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதேசட்டி கிராமத்தில் நக்சல் ஆதிக்கம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலத்தில், நக்சல்கள் ஆதிக்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுவதுமாக ஒழித்துக்கட்டப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடையும் நக்சல்களின் மறுவாழ்வுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்பட்டு வருகிறது.
இ்ந்தநிலையில், சுக்மாவில் காப்புக்காடுகள் அருகே உள்ள பதேசட்டி கிராமத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த நக்சல்கள் 11 பேர் மத்திய ரிசர்வ் படை போலீசாரிடம், சனிக்கிழமை (19) சரணடைந்தனர்.
இதன்மூலம் அந்த கிராமத்தில் நக்சல் ஆதிக்கம் அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது.
மேலும் சத்தீஷ்காரில் நக்சல்கள் இல்லாத முதல் கிராமமாக பதேசட்டியை மாநில பொலிஸார் அறிவித்தனர்.
அந்த கிராமத்தை மேம்படுத்த ரூ.1 கோடிக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
9 hours ago