Freelancer / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்திரயான் - 3 விண்கலம் கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. ஒரு குறிப்பிட்ட அளவிலான ஆய்வுகளை செய்துவந்த நிலையில், நிலவில் சூரியன் அஸ்தமித்தது.
இதனால் 14 நாட்கள் லேண்டரும், ரோவரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீண்டும் சூரியன் உதிக்க ஆரம்பித்ததும் உறக்க நிலையில் இருந்து ரோவர் மற்றும் லேண்டரை மீண்டும் எழுப்பி ஆய்வில் ஈடுபட விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றனர். குறிப்பாக சூரியனின் கதிர்களால் லேண்டரில் உள்ள மின்கலங்கள் மின்னேற்றப்பட்டு ஏனைய ஆய்வுகளை தெளிவாக மேற்கொள்ள விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.
ஆனால் லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து எந்தவிதமான சமிக்ஞைகளும் கிடைக்காததால் இஸ்ரோ தனது நம்பிக்கையை இழந்து வருகிறது. குறிப்பாக, சூரியன் உதயமாகி ஒரு சிலவாரங்கள் கடந்த நிலையில் ரோவர் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago